புத் தகங்களே மக்களென்பேன் - கலி விருத்தம் Poem by Dr.V.K. Kanniappan

புத் தகங்களே மக்களென்பேன் - கலி விருத்தம்

தரைப்பலகை காலடிகளில் கிரீச்சிட்டு அலற
காற்றில் நிசப்தம் கனத்துநில வுகிறது
தூசியையும் பழைமையையும் நுகர முடிகிறது
இத்தகைய கடைகள் மிகவும் அரிது.1

உன்னிப்பாய்க் கவனித்தால் அங்குள்ள புத்தக
நன்கடை முழுவதும் உறங்கும் ஒவ்வொரு
புத்தகத்தின் தாழ்ந்த குறட்டை யொலியை
சத்தமின்றி கவனித்தால் நீயும் கேட்கலாம்! 2

மெதுவாக ஒருதடித்த புத்தகத்தைத் திறந்துபார்!
அதுநீட்டி நெளித்து கொட்டாவி விடுவதைக்கேள்!
அதன்அழ கியஅட்டை அரித்தே யிருக்கிறது
சிற்சில பக்கங்கள் கிழிந்துமிருக் கின்றன! 3

புத்தகங்கள் மக்களில்லை என்றும், அவைகள்
அத்தனையும் ஓரினமில் லையென்றும் யாரேனும்
சொல்ல முடியுமா? புத் தகங்களே மக்களென்பேன்!
முதுகெலும்பும், முகமும் அவைகளுக்கும் உள்ளதென்பேன்! 4

புத் தகங்களே மக்களென்பேன் - கலி விருத்தம்
This is a translation of the poem Books Are People by Stephanie Dower
Thursday, September 24, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success