சத்குருவும் ஈஷாவும் Poem by Raman Savithiri

சத்குருவும் ஈஷாவும்

தமிழகம் செய்த தவத்தின் விளைவல்லவா
தன் ஊர் உடைமை உற்றார் விட்டல்லவா
தண்ணென்ற மேகம்சூழ் வெண்கிரி வந்து
தன்னை உணர நமக்கு கோயில் தந்தார்!

திருப்பணி செய்யும் வேளை தாரம் இழந்தார் - தன்
ஒரு மகளையும் பேணிக் காக்க மறந்தார் - லிங்கம்
உருப்பெரும் நேரம் தன் உயிரையே ஈந்தார்
கருவென நம்மை சுமக்க, வீசிய உடலை சுமந்தார்!

மிக மிக உயர்ந்ததை உலகிற்கீந்த திருப்தியில்
சுகமாய் உடலை உதிர்த்து ஏக நினைத்தும்
பக்திக் கண்ணீருக்கு இரங்கி நமக்கு
முக்தி வாசல் காட்ட உடலில் மீண்டும் புகுந்தார்!

ஊடகங்கள் பல கூட்டத்தோடு கூப்பாடு போடும் - மன
ஊனமுற்றோர் வாய் அறியாமையில் கூக்குரல் இடும்
அவை என் போன்றோர் உள்ளத்தை தீயாய்ச் சுடும் - ஆனால்
ஊழித்தாண்டவ சிவனை என்ன செய்து விடும்?

யேசுவை சிலுவையில் அறைந்தவர் யார்? உண்மை
பேசிய பௌத்தத்தை நாடு கடத்தியது யார்? உலகம்
உருண்டை எனச் சொன்னவரை எரித்தவர் யார்?
மருண்டே, க்ரேக்க ஞானிக்கு விடம் கொடுத்தோர் யார்?

அறியாமையில் உள்ள மக்கள் அல்லவா? இதை
அறியாதவரா எங்கள் சிவன் - சத்குரு நாதன்?
மாயங்கள் புரிந்த அந்தக் கண்ணனின் வழியில்
காயங்கள் ஏற்படா வண்ணம் ஈஷாவைக் காப்பார்!

திரண்ட உலகமே வெடித்துச் சிதறினாலும்
த்யான லிங்கம் அழியாத சக்தியாயிருக்கும்.
திரண்டு உலகமே அடிக்க வந்தாலும்
த்யான அன்பர்கள் சத்குருவின் சரணத்திலிருப்பர்!

சத்குருவும் ஈஷாவும்
Sunday, October 16, 2016
Topic(s) of this poem: spiritual
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Raman Savithiri

Raman Savithiri

Coimbatore, Tamil Nadu, India
Close
Error Success