சந்நிதி என்நிதி Poem by Raman Savithiri

சந்நிதி என்நிதி

பதிறாயிரம் இல்லங்களில் பதிறாயிரம் பாவனைகளை
பரந்தாமன் பாவித்தான்.
தன் பத்தினியரை பரவசத்தில் மூழ்கடித்தான்.
ஒருத்தியிடம் குழலூதினான். ஒருத்தி குழல் கோதினான்.
ஒருத்தி பிள்ளையை சீராட்டினான். ஒருத்தியை மிக பாராட்டினான்.
ஒருத்தியிடம் பொய் கோபம் காட்டினான். ஒருத்தியின் சோகம் தூர ஓட்டினான்.
ஒருத்தி கோலமிட இவன் பாடினான். ஒருத்தி தாளமிட இவன் ஆடினான். ஒருத்திக்கு மருதாணி இட்டான். ஒருத்திக்கோ மலர் சூட்டி விட்டான். வானிறங்கி இழியும் மழை போல் வனிதையருக்கு தானிறங்கி அன்பு பொழிந்தான்.

ஒரே நேரத்தில் பல இல்லங்களை அலங்கரித்த க்ருஷ்ணனைப் போல் ஒரே காலத்தில் இல்லம் தோறும் அருள் மழை பொழியும் சத்குரு. அந்த அருள் பெற சன்னிதி. அதுவே நம் நிதி. அது தரும் நிம்மதி.

சன்னிதி முன் அமர்ந்தேன். என்னை நான் மறந்தேன். என் உள்ளே பறந்தேன். த்யானம் தானாக நிகழ்ந்தது. உள்ளம் ஏனோ நெகிழ்ந்தது. கண்களில் நீர் பெருகியது. கள்ளம் மிக உருகியது.
சொல்ல வார்த்தைகள் இல்லையே. தொட்டேன் ஆனந்தத்தின் எல்லையே.

சந்நிதி என்நிதி
Sunday, October 16, 2016
Topic(s) of this poem: spirituality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Raman Savithiri

Raman Savithiri

Coimbatore, Tamil Nadu, India
Close
Error Success