'க்றிஸ்து' என்ற ஒரு ஜோதி! Poem by Subbaraman N V

'க்றிஸ்து' என்ற ஒரு ஜோதி!



'க்றிஸ்து' என்ற 'ஜோதி' இன்று பிறந்தது
'அன்பு' என்ற திரி, அங்கே ஒன்று எரிந்தது
'அகிம்சை' என்ற எண்ணை அங்கு இருந்தது
'மகிழ்ச்சி' உலகில் எங்கும், அழகாய் நிறைந்தது!

'தியாகம்' என்ற சொல்லிற்கு பொருள் அங்கே கிடைத்தது
'கயவர்' என்றும் உண்டு என்று அப்பொழுதே புரிந்தது
'நல்லவர்கள்' வாழும் வழி ஒன்று அங்கே தெரிந்தது
'அல்லவர்கள்' அழிவர் என்ற அற்புதமும் மலர்ந்தது!

'நம்பிக்கை' என்ற தோணி நம்மைக் காக்கும் என்று தெரியுது
'நல்லவராய்' இருந்து விட்டால் அமைதி நம்மைத் தழுவுது
'வல்லவராய்' வலிமை பெற்றால் வாழும் வகை புரியுது
'உலகம்' உய்ய இந்த நாளில் இறை அருளை வேண்டுவோம்

Thursday, December 25, 2014
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
இன்று கிருஸ்துமஸ் நாள்
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subbaraman N V

Subbaraman N V

Karaikkudi - Tamilnadu- India
Close
Error Success