குரு பூர்ணிமா - குருவின் மடியில் 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣 Poem by Raman Savithiri

குரு பூர்ணிமா - குருவின் மடியில் 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

ஆடிக் காற்றில் மிதந்து வரும் முழுநிலவு
பாடிக் களிக்கும்படி குளிர் ஒளி சிந்த - உலகில்
ஓடிக் களைத்த மக்கள் கால்கள் - அவரை
நாடிவரும் நாள் குரு பூர்ணிமா! 🌝

குருவருள் வேண்டி மனம் மிக ஏங்கி
ஒருநாளேனும் குரு மடி மீது விழி மூடி
சுகம் காண அலையென வரும் மக்கள் - அவர்
முகம் கண்டு நிலா கண்ட அல்லிகளாவர்! 🌝

வார்த்தை ஏதும் பேசாத அக்குளிர் நிலா
வானிலிருந்து ஒளியூட்டி இதழ்களை விரித்திட
மௌனமாய் வந்து நம்குருவோ மன
மொக்குகளை அருளூட்டி பூக்களாக்கிடுவார்! 🌝

வாருங்கள் மதி பொழியும் சோம பானம் பருகிடவே!
தாருங்கள் அகந்தையை காணிக்கையாக குருவடிக்கே!
தளருங்கள் தாய்மடி சுகம் எனக் கிடக்கும் சிசுவாகியே!
மலருங்கள் மணம் வீசி ஆனந்தக் களியாடிடவே! 🌝

குரு பூர்ணிமா - குருவின் மடியில் 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
Sunday, October 16, 2016
Topic(s) of this poem: spirituality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
199 / 166
Raman Savithiri

Raman Savithiri

Coimbatore, Tamil Nadu, India
Close
Error Success