புதுமையான காட்டு விலங்குகள் - இணைக்குறள் ஆசிரியப்பா Poem by Dr.V.K. Kanniappan

புதுமையான காட்டு விலங்குகள் - இணைக்குறள் ஆசிரியப்பா

புல்லாங் குழலினில் வாசித்துப் பழகும்
யானையைப் பார்த்ததாக
அவன்மிக நினைத்தான்;
அவன்மீண்டும் பார்த்தான்; ஆனால்
அதுஅவனின் மனைவி யிடமிருந்து
ஓர்கடிதம்: அவன்சொன்னான், ’கடைசியில் அதுஒரு
வாழ்க்கையின் கசப்பென நானும் உணர்கிறேனே’!

புகைபோக்கிக் கூண்டின் மேல்அமர்ந் திருக்கும்
எருமையைப் பார்த்ததாக
அவன்மிக நினைத்தான்;
அவன்மீண்டும் பார்த்தான்; ஆனால்
அதுஅவனின் தங்கை கணவனின்
தம்பிமகள்: அவன்சொன்னான், ‘நீஎன் வீட்டை
விட்டு வெளியேற வில்லை
யென்றால் போலிஸைக் கூப்பிடு வேனே’!

கிரேக்க மொழியில் கேள்வி கேட்ட
சாரைப் பாம்பைப் பார்த்ததாக
அவன்மிக நினைத்தான்;
அவன்மீண்டும் பார்த்தான்; ஆனால்
அதுஅவனின் அடுத்தவார நடுப்பகுதி:
அவன்சொன்னான், ‘நான்வருந் துவது என்னவெனில்
என்னால் பேச முடியாது என்பதே’!

பேருந்தி லிருந்து இறங்கிவரும் வங்கிக்
குமாஸ்தாவைப் பார்த்ததாக
அவன்மிக நினைத்தான்;
அவன்மீண்டும் பார்த்தான்; ஆனால்
அதுஒரு நீர்யானை எனஉணர்ந்தான்;
அவன்சொன்னான், ’இதுவும் உணவருந்த இங்கிருந்தால்
நாம்உண்ண அதிகம் இங்கே இருக்காதே‘!

காப்பிக் கொட்டை அரைக்கும் வேலைசெய்யும்
கங்கா ருவையே பார்த்ததாக
அவன்மிக நினைத்தான்;
அவன்மீண்டும் பார்த்தான்; ஆனால்
அதுஒரு காய்கறி மாத்திரை
என்றறிந்தான்; அவன்சொன்னான், ‘இதைநான் விழுங்க
வேண்டுமானால் நானொரு நோயாளி யாவேனே’!

அவனது படுக்கை யருகில் நாற்குதிரை
பூட்டிய வண்டியைப் பார்த்ததாக
அவன்மிக நினைத்தான்;
அவன்மீண்டும் பார்த்தான்; ஆனால்
அதுஒரு தலையில்லாக் கரடி
என்றறிந்தான்; அவன்சொன்னான், ‘பாவமிது அப்பாவி!
உணவளிப்போம் என்று காத்திருக் கிறதே’!

Wednesday, May 28, 2014
Topic(s) of this poem: animals
POET'S NOTES ABOUT THE POEM
Hi,
I have translated this song 'A strange wild song’ – a song by Lewis Carroll, in Tamil.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success