Alone Poem by Dinesh Sundram

Alone

தொடர்கிறது, தொடரும்
என்ற முனைப்பில்
களம் கண்டு இருக்கிறேன்..
என் பாதையின் போக்கை மாற்றி
கொஞ்சம் மெல்ல மாற்றி
பணம் எனும் பேய் தேடி
எல்லோரும் சென்ற பாதையில்
நானும் முனைந்தேன்
நடந்தேன், நகர ஆசைப்பட்டேன்
சிறிது தயக்கத்தோடு
தூரம்தான்,
அந்த இலக்கு..

எல்லாம், யாவும் காணும் அனைத்தும்
எனக்கான இன்னொரு இன்பத்தை
எடுத்து காட்டும்
என்ற சிறிய ஆசையில்

வேகத்தை அதிகமாக்கினேன்..
தடைகள்
விதிகள் சுங்கச்சாவடிகள் ஆயின
அந்த இலக்கை அடைய
ஒவ்வொரு சாடியிலும்
எனதான ஒன்று
ஒப்படைக்க படவேண்டும்
என்ற தந்திரம் தெரியாமல்
நானும் நுழைந்தேன்
அழகான அந்த பாதை வழியே
பயணத்தை இனிமையாக்க..

இழந்தேன்,
அடுத்தடுத்த சாவடிகளில்
உற்றார்,
உறவினர்கள்,
நண்பர்கள்,
ஆசைக்காதல்,
காதலி,
எனதான ஆசைகள்..
மீதமுள்ள தாய், தந்தை
கடை சாவடியில்
இழந்தேன்..

எல்லாம், யாவும்
இழந்தபின்,
அடைந்தேன் அந்த இடத்தை,
அது அழகாயிருக்கும்.
அது ஆர்பரிக்கும்,
அது இன்பமூட்டும்,
என்ற ஆசையில்
நானும் நகர்த்தினேன்
நாட்களை,

நினைவுகள் நெண்டின,
நாட்கள் செல்ல செல்ல,
பிடித்தவைகள், பிடிக்கவில்லை
ருசித்தவைகள், ருசிக்கவில்லை
ரசித்தவைகள், ரசிப்பதர்க்கில்லை
ரோஜாக்கள், ரோஜாக்களில்லை
முள்ளும், முள்ளுமில்லை
காற்றும், காற்றுமில்லை
நிலவிடம், நேரமில்லை
மழையிடம், மோகமில்லை
அங்கு நிற்பது
நானுமில்லை,
பின்புதான் தெரிந்தது
என் தனிமை,

தனியாய் தவிக்கிறது
தாடியின்றி
என் தனிமை
கட்டப்படாத சிறையில்..

Saturday, January 10, 2015
Topic(s) of this poem: alone
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success