ஒருஆய்ச்சி தன்நெஞ்சுடன் - ஆசிரியத்தாழிசை 5, கலி விருத்தம் 1 Poem by Dr.V.K. Kanniappan

ஒருஆய்ச்சி தன்நெஞ்சுடன் - ஆசிரியத்தாழிசை 5, கலி விருத்தம் 1

ஒருஆய்ச்சி தன்நெஞ்சு டனோர்செம் மறிக்குட்டி
காற்றுவீசும் குன்றின் கற்சுவறில் சாய்ந்தபடி
ஏற்றமுடன் அவளதை அன்புடன்தா லாட்டுகிறாள்! 1

நெட்டுயர்ந்த குன்றுகளில் சுற்றியலை கின்றன
கடினக் குன்றில் விருப்பம்போல் விளையாடி,
ஒருஆய்ச்சி தன்நெஞ்சு டனோர்செம் மறிக்குட்டி! 2

நீள முடிக்கற்றை நிலையின்றி அலைபாய,
கத்தும் செம்மறிகள் காம்புகளில் பசியாற
ஏற்றமுடன் அவளதை அன்புடன்தா லாட்டுகிறாள்! 3

அடையும் நிலப்பரப்பே இரவின் புகலிடம்
அச்சாய் பள்ளத்தாக் கும்கீழே காத்திருக்க,
ஒருஆய்ச்சி தன்நெஞ்சு டனோர்செம் மறிக்குட்டி! 4

மந்தையிடம் அவளார்வம், ஆதுரம், அன்பு
எந்நாளும் குட்டிகளி டம்பரிவும் கனிவும்
ஏற்றமுடன் அவளதை அன்புடன்தா லாட்டுகிறாள்! 5

ஒருஆய்ச்சி செம்மறிக் குட்டிகளைச் சீராட்ட,
அவள்வாழ்வு செம்மறி யுடனென்றும் பரவசமே!
ஒருஆய்ச்சி தன்நெஞ்சு டனோர்செம் மறிக்குட்டி!
ஏற்றமுடன் அவளதை அன்புடன்தா லாட்டுகிறாள்! 6

This is a translation of the poem The Shepherdess (Villanelle) by David Wood
Monday, September 14, 2015
Topic(s) of this poem: countryside,farm
COMMENTS OF THE POEM
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success