தாய்மை! Motherhood! Poem by Subbaraman N V

தாய்மை! Motherhood!


தாய்மை என்பது இறைவன் வரம்
தூய்மை தாயின் இதய பலம்
வாய்மை அவளது வலது கரம்
நேர்மை இவளது இடது கரம்!

அன்னை தருவது அன்னையின் அன்பு
தன்னைத் தருவது தாயின் பண்பு
நம்மைக் காப்பது நாளும் நினைவு
எம்மை வளர்ப்பது அவளது கருணை!

தாய்க்கு வயது தொண்ணூறு ஆயினும்
தாய்மைக்கு வயது ஒன்பதே ஆகும்!
தள்ளாத வயதில் முதியோர் இல்லமா
தாக்கிடும் நம்மை அழியாத பாவம்!

காலம் முழுவதும் பாலீன்ற பசுவினை
பால் நின்ற போதில் மாய்ப்பது முறையோ?
உழைத்த நாளில் உறவினைப் பேணி
வளர்த்த தாயை மறப்பது நெறியோ?

உயிரைக் கொடுத்தும் தாயினைக் காப்போம்
உரிமை கொடுத்து தாய்மையை மீட்போம்
தாயைத் தெய்வமாய் பூசிக்கும் நாடு
தந்தையைக் கடவுளாய் காண்கின்ற நாடு!

பெண்மையை என்றும் போற்றுகின்ற நாடு
பெண்களை என்றும் காத்துநிற்கும் பேறு!
உண்மையை எப்பொழுதும் உணர்ந்து நிற்கும் வீடு
பெண்களை இறைவியென வேண்டி நிற்கும் மாண்பு!


Motherhood is God’s gift
Purity is strength of her heart
Truthfulness is her right hand
Honesty is her left hand!

She bestows mother’s love
Giving herself is her virtue
Keeping us safe her daily thoughts
Constant nursing is her grace!
May be mother is ninety
Motherhood is just nine!
In her advanced age- in Old age home?
Amongst sins, worst is this sin.

The cow that yielded milk all these years
Is it fair to kill her when the milk stops?
Showering love while mother is young
Crime it is to forget aged mother who nursed?

Save the Mother sacrificing our lives
Give all your rights to redeem motherhood
This is the nation that worships Mother
This is the Nation that sees God in Father!

This is the land that adores womanhood
Deems it a privilege to protect women
This is the home that realizes that Truth
Our culture it is to treat woman as God!

POET'S NOTES ABOUT THE POEM
Today is MOTHER'S DAY! A tribute to MOTHER and MOTHERHOD
COMMENTS OF THE POEM
Kavya . 25 August 2015

well said Sir. No body can replace Mother in any form.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subbaraman N V

Subbaraman N V

Karaikkudi - Tamilnadu- India
Close
Error Success