சன்னிதி எம்நிதி Poem by Raman Savithiri

சன்னிதி எம்நிதி

இல்லந்தோறும் அருள்வெள்ளம் பெருகும் வகை செய்வோம்
அன்றும் இன்றும் இனி என்றும் தமிழகமே பக்திக்கு
தெள்ளத்தெளிவான முன் உதாரணம் எனும் உண்மையை
சொல்லாமல் சொல்லுவோம்! ஆனந்த உலகம் செய்வோம்!
சந்நிதி நம் நிதி! நாதன் பாதம் சொல்லும் நால்வேதம்!
பொந்நிதி வேண்டோம்! கற்பூரமென கரைந்திடவே ஏங்குகிறோம்! !

மரணம் நோக்கி காலம் மெள்ள நம்மை இட்டுச்செல்ல
அந்தக் காலத்தை வெல்ல, குருவருள் இன்று ஆட்கொள்ள,
சரணம் என்று நாம் தஞ்சம் கொள்ள, கருணைக்கடல்
சந்நிதி வடிவத்தில் நமக்காக இரங்கி வருகிறார்!
வரவேற்போம்! வாழ்த்துரைப்போம்! !
கரங்கோர்ப்போம்! களிசேர்ப்போம்! !

சன்னிதி எம்நிதி
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Raman Savithiri

Raman Savithiri

Coimbatore, Tamil Nadu, India
Close
Error Success