முத்துக்கள் எத்தனை முத்துக்களடி தோழி Poem by KAVIN CHARALAN

முத்துக்கள் எத்தனை முத்துக்களடி தோழி

பூத்த முல்லை மலரிதழில் காலைப் பனி முத்துக்கள்
வியர்த்த உழைப்பாளியின் உடலில் வேர்வையின் முத்துக்கள்
வானத்து முகில் தூவிடும் மழைத்துளி முத்துக்கள்
பார்க்கும் உன் விழிகளில் காதல் ஒளி முத்துக்கள்
பேசும் உன்னிதழ்களில் உருளுதடி பாண்டியன் முத்துக்கள்
கண்டு கண்டு ரசித்த என் இதயமெல்லாம் கவிதை முத்துக்கள்
முத்துக்கள் எத்தனை முத்துக்களடி தோழி!

முத்துக்கள் எத்தனை முத்துக்களடி தோழி
Thursday, December 28, 2017
Topic(s) of this poem: pearls
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success