Vettuvam Hundred - 30 / Hunting Hundred - 30 Poem by Kaniamudhu Shanmugam

Vettuvam Hundred - 30 / Hunting Hundred - 30

Vettuvam Hundred- 30/
Hunting Hundred - 30

By - Mounan Yathreeka

Translated by Kaniamudhu Shanmugam

The noise of the boar hitting aggressively the stone with its horn is heard
Let the ears of the boarstiffen
Listen to the rapid uneven breath of the boar
As the stone yields and turns the smell secreting from the buried tuber increases its outrage
The compressed
stone - underneath it
grown tuber
and the roots that bind it are being cut by the boar

While the tuber juice overflowing in its mouthincreases its intoxicationour arrowmust dash like a beetle

Hey brother!
Without the boar feeling the pain
Without it screaming
Tasting the sweetness of the bulb
It should fall on the earth
Touch the life of it without causing pain


வேட்டுவம் நூறு - மௌனன் யாத்ரீகா
- - - - - - - - - - - - -
30.

கொம்புகளால் கற்களை முண்டும்
ஒலி கேட்கிறது
காதுகளை மேல்நோக்கி விடைக்க விடு
முதிர்ந்த பன்றியின் சீரற்ற மூச்சைக் கேள்
கல் புரளப் புரள கசியும்
புதைந்துள்ள கிழங்கின் வாசனை
அதன் மூர்க்கத்தை அதிகரிக்கிறது
இறுகியுள்ள கல்லையும்-அதனடியில்
விளைந்துள்ள கிழங்கையும்
கட்டிப் பிணைத்துள்ள வேரை
அது அறுத்துக் கொண்டிருக்கிறது
கடைவாயில் வழியும் கிழங்குச் சாறு
அதன் மயக்கத்தைக் கூட்டும்போது
ஒரு வண்டைப்போல் அதன் உடலில்
நம் அம்பு மோத வேண்டும்
ஏலே பங்காளி
வலியின் தீமையுணராமல்; கதறாமல்;
கிழங்கின் ருசியை மென்றபடியே
அது மண்ணில் சாய வேண்டும்
நோகாமல் அவ்வுயிரைத் தீண்டு

Vettuvam Hundred - 30 / Hunting Hundred - 30
Thursday, August 6, 2020
Topic(s) of this poem: hunting
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success