++++++++++((())) +++++
அலைபேசி பேசினால் அவ்வளவுதான்
நாம் பேச மாட்டோம்
அதுவே பேசிக் கொண்டிருக்கும காரணம்
அது நம்மை விட புத்திசாலிகள் அதனால்...
அவைகளை பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான்
மனிதர்களின் ஆட்டம் முடிந்து போனது என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
காரணம்
எந்த அலைபேசியிலும்
நாம் தான் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்
நாளை அல்லது நாளை
இந்த டிஜிட்டல் யுகத்தில் அலைபேசிகளும் நம்மிடம் பேச ஆரம்பித்து விடும்...
அதில் எந்த சந்தேகமும் இல்லை காரணம்...
மனிதர்களை பேசி பேசி
எவ்வளவு நாள் தான் கேட்டுக் கொண்டிருப்பது? அதனால்தான்
அலைபேசிகளும் அவை இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்து விடும்
அந்த பேச்சில் சமதர்மம் இருக்கும் நிதர்சனம் இருக்கும்
கண்டிப்பாக சாதி மத வன்மம் இருக்காது அறிவியல் வளர்ச்சியாக இருக்கும்
அலைபேசி பேசுவதும் நவீன
காலத்தின் கட்டாயம்
அது ஒரு நாள் இங்கு நடக்கும்
அப்போது மனிதர்கள்
செல்போனை கையில் வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்
காதுக்குள் மட்டுமே சொருகி கொண்டிருப்பார்கள்
தங்கள் வாழ்க்கையை செல்போனின் அந்தஸ்துக்கு தகுந்தபடி சுருக்கி கொண்டு இருப்பார்கள்
அதேசமயம்
அதிகம் பேசாமல்
வாலை சுருட்டி கொண்டிருப்பார்கள்
அலைபேசி மட்டும்
அழகாக பேசிக் கொண்டிருக்கும்
அதே சமயததில் வாழ வாய்ப்பு
வந்து வட்ட காரணத்தால்
தனது வாய்க்கு வயிற்றுப் பசிக்கு
சாப்பிட ரசகுல்லா கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
சிக்கன் பிரியாணி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
கண்டிப்பாக அலைபேசி
அழகாக பேச ஆரம்பித்தால்
அதுவும் நடக்கும்
ஆமாம் அது நடக்கும்...
அது எப்போது என்று தான் இப்போதைக்கு சொல்ல முடியாது
+ ஓட்டேரி செல்வ குமார்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem