கண்மனி Poem by chandru kutty

கண்மனி

என் அழகு அம்மு குட்டியே !
என் ஆசைப் பப்புக்குட்டியே!
உன்னை அள்ளி அணைக்கும் போது
அன்னையின் நேசத்தை நினைவூட்டியது உன் சுவாசம்.
தொண்மையான மொழி தமிழ் என்றே இதுவரை நானறிந்தேன்
ஆனால் இன்று உண்மையான தொண்மை மொழி உனதென்று உணர்ந்தேன்.

என் உடல், உயிர் ஊற்றே!
என் உயிர் மூச்சுக் காற்றே!
நீ பிறக்கையில் பிறவியின் பலனை அடைந்தேன்
பருவத்தின் புது பதவியினையும் அடைந்தேன்.
உன்னை தூக்கி தோளில் சேர்த்து சாய்க்கும் போது,
மலர் வாசமும் மறைந்தது உன் வாசத்தால்
என் கன்னத்தில் உன் கன்னத்தைப் பதிக்கையில்
தாய்மையின் மேன்மையினை உணர்ந்தேன்.

மகிழ்ச்சியை அளித்த மகிழம்பூவே!
நீ உன் தாய்க்கும், எனக்கும் நடுவில் உறங்கையில்
வரும் என் கனவுகள் உன் கனவுகளைப்பற்றியே!
என் தோளில் உனைத்தூக்கி அமர்த்துகையில்
உன் கால்கள் என் நெஞ்சில் நாட்டியம் ஆடுகிறது
ஒரு விரல் அல்ல இரு விரல் அல்ல நான்கு விரல்களையும்
நாவில் வைத்து முகத்தில் நளினம் காட்டுகிறாய்

என் மறுப்பிறப்பின் தவமே!
நான் கொண்ட விலையில்லா முத்தே!
என்னுடைய புடைவையை ஒருப் புறம் உறுதியாய் பிடித்தும்,
மறுபுறம் உன் முகத்தை என் மார்பில் திணித்தும்.
உதட்டில் உதிர்க்கிறாய் பசியின் சினுங்களை.
உன் பசியாறியப்பின் உன் கால்களால் வயிற்றில்
நீ முட்டும் முட்டல் மீண்டும் ஒர் வலியில்லா சுகப்பிரசவம்.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success