உம் முதல் படி.... Poem by MBJ Pancras

உம் முதல் படி....

கேந்திரிய வித்யாலயா எண் 2 பாண்டிச்சேரியின் கல்வி நிலையமே உம் முதல் படி....
உம் வளர்ச்சிக்கு வித்திட்டு வேரூன்றிய நிலம் இதுவே.
உம்மில் வளர்ந்த கொடி கிளைகளாக சிறந்து விளங்குகின்றன.
அக்கிளைகள் எண்ணற்ற இலைகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இலையும் உம் வாழ்க்கைக் கதையை பறைசாற்றுகின்றன.
நீர் இந்நிலத்தில் விட்டுச் சென்ற நீங்கா நினைவுகள் வண்ணக் கோலங்களாக
வருங்காலங்களில் மிளிரும்.
இக்கல்விநிலையத்திற்கு நீர் செய்த சேவை ஒரு நினைவுச் சின்னமாக திகழ வேண்டும்.
உம் சேவை மறக்கப்படாத நிஜம்!
உம் எண்ணங்கள் உம் வார்த்தைகளை பிரதிபலிக்கட்டும்.
உம் சேவை சுவரோவியங்களாக பொறிக்கப்படட்டும்.
இந்நிலத்தின் நினைவாக நீர் இருப்பீர்.
இந்நிலம் உம் வாழ்க்கையின் பிறப்பிடமாகும்.
ஆகவே, நீர் மகிழ்ந்திருங்கள்!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
524 / 370
MBJ Pancras

MBJ Pancras

Chennai Tamil Nadu India
Close
Error Success