அவள் காதல் Poem by Isha Faryal

அவள் காதல்

மனம் எப்படி வெளிப்படும் மணக்கோளத்தில் அவன்...

எனது வலியும் துயரும் பெரும் கொடுமையென்றபோதும் அவன்படும் வலிதான் எனை வாட்டி வதைகொள்ளச்செய்கிறது

எனை நீங்க விரும்பாதவன் எவ்வளவு துயரோடு அணிந்திருப்பான் மாலையை

மனதில் நான் வந்து அவனை கொலைசெய்து கொண்டிருக்கிறேன்... எப்படி அவன் நினைவுகளைவிட்டு நீங்குவது

முகமெங்கும் சிரிப்பற்று வாடி நிற்கும் அவனை தழுவிக்கொள்ள வழியேதும் உண்டோ என்ற தேடலை நான் நிறுத்தியாகவேண்டும்

அவன் என்னை கனப்பொழுதுகள் மட்டும் மறக்கவேண்டும்! ! !

காதலனே சிறிது நேரம் எனை மறந்திரு மகிழ்ந்திரு உறுதியாக உன் மனங்களை மீண்டும் நிரம்பிவிடுகிறேன்

எனக்கும் வலிதான் பிரிவு கொடியதுதான் என்றபோதும் அவன் சோர்ந்து நிற்கும் சூழலை எனக்கான வலிக்கு மருந்தாக எடுத்துக்கொள்ள விருப்பமற்றவள் நான்

அவன் பாவப்பட்டவன் என் காதலன்

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success