ஐந்து வயதில்
மிட்டாய் பகிர்ந்ததிலிருந்து
ஆரம்பித்த அன்பு...
ஒரே வகுப்பில்
ஒன்றாய் அமர்ந்து
ஒரே புத்தகத்தில்
பாடம் படித்து...
இடைவேளையின் போது
கதைகள் பலபேசி
மதியத்தில் மாறிமாறி
உணவூட்டி...
பண்டிகையின் பொது
பலகாரங்கள் பகிர்ந்து
புதுத்துணி கிழியாமலிருக்க
வலிக்காமல் கொட்டிக்கொண்டு...
குறும்புத்தனத்தை ரசிக்க
கோடிகோடி கண்வேணுமடி
நீ ருசிபார்த்த எச்சிமிட்டாய்
எனக்கு அமிர்தமடி...
பருவப்பெண்ணான போது
பார்த்த பார்வையின்
மந்திரம்தான் என்னவோ
மயங்கிவிட்டேனடி...
அன்றொருநாள் கனவில்
அலறித்தான் போனேன்
அசரவைக்கும் தேவதை-நீ
அருகில் வந்ததால்...
கல்லூரி செல்கையில்
கைகள் உரசிக்கொண்டதும்
காமன் கொடியெற்றியதை
என்னைத்தவிர எவர்அறிவர்?
எவர் அறியக்கூடும்
எனக்குள் நீயிருப்பதை
மறைக்காமல் சொல்லிவிடு
உனக்குள் நானிருப்பதை...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem