Tamil Poem by Jeyagajany Jeyanathan

Tamil

சுவாசிக்க மறப்பேனா?
தாகத்தில் தண்ணீர் குடிக்க மறப்பேனா?

பசி உயிரை வாட்டும் போது உணவை தேடி உண்ண மறப்பேனா?

சோகம் பெருங்கடலாய் திரண்டு வரும் போது கண்ணீர் சிந்த மறப்பேனா?

இன்பம் தான் ஆகாயம் முட்டும் வெள்ளமாய் என்னை மூழ்கடிக்கும் போது புன்னகைக்க மறப்பேனா?

இதை அனைத்தையும் நான் மறந்தாலும்,
வேறு அந்நிய தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும்,
என் உயிருக்கு இனிய தாய்மொழியாம் தமிழை என்றும் நான் மறவேன்

Thursday, April 13, 2023
Topic(s) of this poem: tamil
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success