தனியாக குடிக்க Poem by poongulali selvamuthu

தனியாக குடிக்க

மலர்களிடத்திருந்து என் வைன் கோப்பையை எடுக்கிறேன்
தனியாக குடிக்க, நண்பர்கள் இல்லாமல்

நிலவை மயக்க என் கோப்பையை ஏந்துகிறேன்
அதுவும், என் நிழலும், மூவராகிறோம்

ஆனால் நிலவு வைன் அருந்தாது
என் நிழலும் அமைதியாக தொடர்கிறது

நிலவுடனும் நிழலுடனும் நான் மகிழ்வாக பயணிப்பேன்
வசந்தத்தின் இறுதிவரை

நான் பாடும் போது, நிலவு ஆடும்
நான் ஆடும் போது, என் நிழலும் கூட ஆடும்

நிதானத்தில், வாழ்க்கையின் சந்தோஷத்தை பகிர்கிறோம்
குடித்து, தனித்தனியே பிரிகிறோம்

நிரந்தர நண்பர்கள், தனியே திரிந்தாலும்
மீண்டும் சந்திப்போம் பால்வெளியில்

translated into Tamil

Sunday, March 30, 2014
Topic(s) of this poem: alone
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success