அரசு சாராயம் விற்றுவளம் பெறட்டுமே! - கலி விருத்தம் Poem by Dr.V.K. Kanniappan

அரசு சாராயம் விற்றுவளம் பெறட்டுமே! - கலி விருத்தம்

புழுதி நிறைந்த பாதையில் பள்ளி
செல்ல நமது செல்லப் பிள்ளையை
நேர்த்தி யாகவும் சுத்த மாகவும்
அனுப்புவ(து) எப்படி என்றறி வேனோ?

நமது சொரணை உள்ள தமிழக
அரசியல் தலைவர் அனைவரும் சட்டசபை,
பாரா ளுமன்றம் செல்லுமுன் இவ்வழி
ஒருமுறை நடந்து செல்ல வேண்டுமே!

மாணவ மாணவியின் வெண்மைக் காலணியை,
சீருடையை வெண்மை யாகவே கொண்டு
செல்வதும், பள்ளி தருகின்ற புழுத்த
அரிசிச் சத்துணவை உண்பதும் எப்படியோ?

நம்நாட்டை முன்னேற்றத் துடிக்கும் அவர்களும்
நம்போன்ற துன்பம் அனுபவித் தாலும்
நடந்தன மறந்து பணமுள் ளோரையும்,
பதவியுள் ளோரையும் நட்பாக் கினரே!

நமது மக்களில் பாதி மிகஏழை
புவிதனில் தூசு, தூசினும் கேவலம்
புத்தாடை அணிவது அபூர்வ நிலவு
போல வருடம் ஓரிரு முறையே!

உணவுப் பற்றாக் குறையொடு சிரார்கள்!
அவர்கள் மருந்து திருடப் படுகிறது!
மருந்திலும் பாலிலும் கலப்படம்! ஏழைகள்
வாங்கும் எதில்தான் கலப்படம் இல்லை?

அறிவாளி மக்கள் நல்ல உணவும்
பணமும் அனுபவிக்க, ஏழை உழைப்பவர்
வர்க்கம் டாஸ்மாக் சரக்கைக் குடித்து
அரசு வருமானம் மிகப்பெருக் கினரே!

அரசுக்கு மக்கள் குடிகா ரனாகவே
இருக்கட்டும்! பெண்கள் அல்லல் படட்டும்!
குழந்தை குட்டிகள் பட்டினியில் சாகட்டும்!
அரசு சாராயம் விற்றுவளம் பெறட்டுமே!

Tuesday, May 27, 2014
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
A poem, by veeraiyah subbulakshmi ‘Alcoholism in Tamil Nadu, S.India' is translated in Tamil poetic form 'kali viruththam' by me, Dr.V.K.Kanniappan
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success