விடிந்து விடாதே Poem by Mana Kavingyan

விடிந்து விடாதே

விடிந்து விடாதே
இரவு தொடரட்டும்

சூரியனை விடுப்பு எடுக்க சொல்லுங்கள்
கண்கள் முழித்திருக்க வரம் கேட்கும்
நட்சத்திரங்கள் மேலும் வளரும்
நிலவின் பக்கம் செல்வேன்‌

பாதைகள் அதன் வழி மறந்து குழந்தையாக தவிக்கும்

நிழல்கள் உலா வரும்
இருட்டை ரசிக்கும் மின்மினியாக
காத்துக் கிடப்பேன்

விடிந்து விடாதே

-மனக்கவிஞன்

© Manakavingyan

POET'S NOTES ABOUT THE POEM
Let night continue
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success