Untouchability In Temple Poem by Lion Rajmohan

Untouchability In Temple

Rating: 5.0

குளித்து விட்டு
கோவில் சென்றேன்..
குடித்து விட்டு
வந்தேன் என்று..
வாய் கூசாமல்
வசை பாடினான்..
புடவை அணியா பூசாரி! !

பொய் குற்றம் கூறுகிறான் என்று
முறை இட்டேன்
முற்றும் துறந்த
முனிவரிடம்..

பூசாரியின் ஜால்ராவில்
பூரித்து போன முனிவரோ..
'உயர்வாய்
உன்னை நீயே
எண்ணாதே'..
குடி காரன் தான் நீ..
ஆம்,
தாழ்ந்த குடிகாரன் தான் நீ என்று..
என் தரம் தாழ்த்தி ஏசினார்..

புரிந்து கொண்டேன்
பூசாரியே மேல் என்று..

குளித்தது குற்றமா..
கோவிலுக்குள் சென்றது குற்றமா..
தாழ்ந்த குடியில் பிறந்தது குற்றமா என்று
குமுறுகிறேன் தலை
குனிந்த படி..! !

கோவிலுக்குள் இடம் இல்லை எனினும்..
இறைவா..
உன் மனதில் இடம் இல்லை என்று
உருக்கி விடாதே..என்
உடைந்த
உணர்வுகளை..

உலகம் உன்னை
வெறும் கல் என
வெறுத்திடும் முன்னே! !
உணர்த்திடு..
என் திறமை..
என்ன வென்று?

POET'S NOTES ABOUT THE POEM
THis poem tries to express the pain of a person who underwent humiliation due to caste dsicrimination in a workplace.Discrimination due to caste is quiet common in public and offices in India. When a supervisor shows discrimination anda labour takes the issue to the manager, manager shows more discrimination than the supervisor.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success