நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே! Poem by Dr.V.K. Kanniappan

நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

வானம் நீல நிறமாய் மாறி
மேகங்கள் திரண்டு கருக்கும் போது
மழையின் வாசத்தை நாசி உணர்கையில்
நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

விடியலில் பறவைகள் வெளிவரும் போது
பச்சை மண்ணின் வாசம் உணர்கையில்
புத்தம் புதுகாற்று வீசும் போது
நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

மாலை நேரம் ஆற்றோரம் நடக்கையில்
மாலைக் கதிரவனின் ஒளிமுகத்தில் படும்போது
இனிய தென்றல் எனைத்தொடும் போது
நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

மழைத்துளிகள் 'உஸ்'என்ற தாளிப்பு ஒலியுடன்
விழும்போது சன்னலின் பின்னால் நிற்கிறேன்,
உன்னுடன் இருப்பதுபோல் உணரும் போது,
நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

இரவு இருளில் மூழ்கி இருக்கையில்
உறக்கம் இன்றி நானும் தவிக்கிறேன்
உன்னால் வரமுடியா தெனஅறியும் போது
நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

நீஎன் கனவில் வரவே வேண்டும்,
வராமல் இருக்க உன்னால் முடியாது,
என்கனவில் உன்னுடன் இருக்கும் போது
நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே!

Sunday, June 1, 2014
Topic(s) of this poem: Sky
POET'S NOTES ABOUT THE POEM
Hi,
This poem in Tamil 'நானுன்னை நினைக்காமல் இருக்க முடியாதே! ' is a translation of an English poem 'Remembering you' by Poet Shohana Islam.

Remembering you
When the sky turns blue
And the clouds turn black
I can't stay without remembering you….
When the birds creeping in the dawn
And the smells of green ground
With a fresh wind blow through
I just can't stay without remembering you …
When I start to walk around
River side in the evening time
The shadow of sun fall on my face
And a sweet wind blow touching through
I can't stay without remembering you….
When the rain drops on ground
With a sizzling sound around
I stand behind the window
To try to feel that I'm with you
Then I can't stay without remembering you …..
When the night feels so dark
Couldn't sleep all the time
Know you couldn't come around
But still I can't stay without remembering you ….
I want you in my dream
That is only my won world
You can't stay out of it
And I will stay with you in my dream
I never can't stay without remembering you ……

- Shohana Islam
COMMENTS OF THE POEM
Veeraiyah Subbulakshmi 14 February 2015

Beautiful translation and I enjoyed reading..Thank you for sharing Dr.VKK

0 0 Reply
Veeraiyah Subbulakshmi 16 January 2015

Á¢¸×õ «Õ¨ÁÂ¡É ¸Å¢¨¾. À¡Ã¡ðÎì¸û.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success