Poem On Goddess Saraswathi And Her Fame Poem by Latha Govindasamy

Poem On Goddess Saraswathi And Her Fame

அதிகாலையில் உனது முகத்தில் விழித்தலே
தலை சிறந்தது என எண்ணுகிறேன்;
அதை நான் செய்யவும் விழைகிறேன்;
என் அறிவை அனுதினமும் பெருக்குவாய்;
எனை சிறப்பாக இயக்க அன்றாட வாழ்க்கையிலே;
இந்த அகிலம் போற்றும் அன்னையே!
வெள்ளைக் கமலத்தில் வீற்றிறுக்கும்
ஸரஸ்வதி அன்னையே!
கல்விக்கு அரசியே கலைமகளே!
உனை நான் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
இக்கணமும் எக்கணமும்!
உன் புகழ் என்றும் மேலோங்கி நிற்கவே!
சரணம்🙏

Poem On Goddess Saraswathi And Her Fame
POET'S NOTES ABOUT THE POEM
Worshipping Goddess Saraswathi enables us to gain good education
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success