திருப்தி(Thirupthi) Poem by Subha Poomani (kavithaigal)

திருப்தி(Thirupthi)

திருப்தி

அப்பாவிற்கு திருப்தி
வங்கி கையிருப்பில்...
மனைவிக்கு திருப்தி
அலமாரியிலிருக்கும் துணியில்...
குழந்தைக்கு திருப்தி
நினைத்தது கிடைக்கும் போது...
நண்பர்களுக்கு திருப்தி
உயர்தர விருந்து கொடுக்கும் போது...
உறவினர்களுக்கு திருப்தி
ஓடி ஓடி உதவும் போது...
அம்மா! உனக்கு திருப்தி
நான் சந்தோசமாக இருக்கும்போது!
எனக்கு திருப்தி
உன் மடியில் தலை சாய்க்கும்போது...

POET'S NOTES ABOUT THE POEM
பணம் சம்பாதித்து உறவுகளை திருப்தி படுத்தி பாசத்தை தேடும் ஆண்மகனின் வலி...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success