காற்றினில் நானொரு அம்பெய்தேன் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் Poem by Dr.V.K. Kanniappan

காற்றினில் நானொரு அம்பெய்தேன் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

காற்றினில் நானொரு அம்பெய்தேன்; அந்தோவஃ
தாற்றலோடு வேகமாய்ச் சென்றதுவே; - ஏற்று
விரைந்த அதுயெந்தன் பார்வையில்செல் லாது
தரைவிழ; யெங் கென்றறி யேன்! 1

காற்றினில் நானொரு பாடலைப் பாடினேன்;
காற்றில் கலந்தந்த பாடலை – போற்றி
புரையேறாக் கண்களில் கண்டவர் சொல்வீர்!
தரைவிழ; யெங் கென்றறி யேன்! 2

மிகமிக நாட்களும் செல்லவேநான் கண்டேன்
தகவுடன் அம்புடை யாமல் – புக, தேக்கும்;
அங்கந்த பாடலு(ம்) ஆதியந்த மாய்நண்பன்
தங்கமான நெஞ்சம தில்! 3

This is a translation of the poem The Arrow And The Song by Henry Wadsworth Longfellow
Sunday, September 6, 2015
COMMENTS OF THE POEM
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success