மற்றுநான்ஓர் நல்லதேவ தை! - இரு விகற்ப நேரிசை வெண்பா Poem by Dr.V.K. Kanniappan

மற்றுநான்ஓர் நல்லதேவ தை! - இரு விகற்ப நேரிசை வெண்பா

Rating: 2.5

வானிலி ருந்துதரை யில்வீழ்ந்த தேவதைநான்;
நானிலத்தில் நம்பிக்கை யும், கனவும் – நானே
இழந்து தரையிலே வீழ்ந்ததேவ தைநான்
உழன்றஞ்ச வேண்டாம் உணர்! 1

வருத்தமே கொண்டவோர் தேவதை நானே!
உருக்கொண்டிங் கேவந்த தேன்இன் – னொருமுறை!
காரணமாய்த் தான்என் சிறகொடித்து மானிடராய்ப்
பேரெடுத்த தேவதை நான்! 2

தரையில் விழுந்தவோர் தேவதைநான் என்றே
உரைப்பேன்; மறுமுறை தந்த – புரையில்
தடத்திலே முன்செய்த தப்புகள்செய் யாது
நடப்பேனே நல்வழி தேர்ந்து! 3

முன்செய்த தப்புகள்செய் யாது நடப்பேனே!
இன்னுமோர் நல்வழி தேர்ந்துநான் – மன்னிப்பைப்
பெற்றுய்ய செய்வேன் பொறுமையுடன் தக்கபடி
மற்றுநான்ஓர் நல்லதேவ தை! 4

This is a translation of the poem Fallen Angel by Jennifer Rondeau
Monday, September 21, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Kaliappan Ezekkial 30 September 2015

ஒரே பொருளை எப்படி விதவிதமாகச் சொல்லலாம் என்பதைத் தெளிவாக்கியதற்கு நன்றிகள்!

0 0 Reply
Kanniappan Kanniappan 30 September 2015

கருத்திற்கு நன்றி. Fallen Angel என்ற கீழேயுள்ள பாடலை மொழிபெயர்க்கும் பொழுது, சில சொற்றொடர்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்த வேண்டியிருந்தது. Fallen Angel I have fallen from sky, Fallen to the ground, I am the angel of sadness, Angel of lost hopes, Angel of lost dreams, I am the fallen angel, Fear me not, I am here for reason, That reason is to have a second chance in life, That life I was given for a reason, They took my wings, They took me apart made me human, I was the fallen angel, But that fallen angel had one chance in life that she was given, This angel won’t make the same mistakes she made before, This angel will go down the right path that has been chosen for her, This fallen angel know what she has to do to be forgiven. – Jennifer Rondeau

0 0
Kaliappan Ezekkial 30 September 2015

அருமையான வெண்பாக்கள்! ஒரே பொருளை எப்படி விதவிதமாகச் சொல்லலாம் என்று தெளிவாக்கியுள்ள முறை அழகே!

0 0 Reply
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success