Yen Uyiranaval Poem by Subha Poomani (kavithaigal)

Yen Uyiranaval

நான் எழும் முன்பே
எழுந்து தேநீர் கலந்து-எனக்கு
பிடித்தமான சமையல் செய்து...

குளிக்க வைத்து ஆடையணிவித்து_எனக்கு
உணவு ஊட்டி தானும் உண்டு
கையசைத்து வழியனுப்பி-மாலை
வரும்வரை காத்திருந்து...

எனது மனநிலைக்கேற்ப _நீ
தன்னையும் மாற்றி தனக்கென்றில்லாமல்
எனது மனதின் பிரதிபலிப்பாய்
எனது வீட்டாருக்கு மகளாய்...

எனக்கு சம்பளமில்லா வேலைகாரியாய்
என் பெற்றோருக்கு செவிலியாய்...
என் காமத்திற்கு தீனியாய்
குழந்தைகளுக்கு நல்ல தாயாய்...

கொஞ்சும் போது குழந்தையாக
காலையில் அன்பில் அன்னையாக...
மாலையில் கைகோர்த்து தோழியாக
இரவில் மஞ்சனையில் மனைவியாக...

இத்தனை பாடுகளையும் சுமந்து
எதுவுமே இல்லாததுபோல் சிரித்து...
என்னை நின் அன்பில் நனைத்து
எனக்கென்று நீ வாழ்ந்து...

போதுமடி உன் பாடு
போய்விடு எனக்கு முன்பாக...
உயிரற்ற உன்னுடலை கூட என்னை
தவிர யாரும் பார்க்க கூடாது...

POET'S NOTES ABOUT THE POEM
என் கனவில் என்னவன் சொன்ன வார்த்தைகள்...
COMMENTS OF THE POEM
Vijay Sai R 01 November 2012

very nice expressive words...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success