வரதட்சணை Poem by Subha Poomani (kavithaigal)

வரதட்சணை

பதினெட்டு வயதில்
பெண் பார்க்க வந்தார்கள்...
பதார்த்தங்களை ருசித்துவிட்டு
யதார்த்தமாய் கேட்டார்கள் பொன்னை...

பெரிய இடத்தவர்களாம்
பையனுக்கு ஐந்திலக்க சம்பளமாம்...
பெண்ணுடன் பொன்னும் போதாதென்று
போய்வர வேண்டுமாம் மகிழுந்து(கார்) ...

திருமணச் செலவுகளுடன்
கட்டிலுடன் மெத்தையும் வேண்டுமாம்...
தலைத் தீபாவளி பொங்கலுக்கு
தங்கநகையுடன் ஆடையும் வேண்டுமாம்...

பிரசவச் செலவு போதாதென்று
பேரனுக்கும் வேண்டுமாம் பொன் நகை...
பிறந்த வீட்டிற்கு வரும்போது வெறுங்கை
புகுந்த வீட்டிற்கு போகும்போது இரு பை...

பெண்ணாய் பிறந்தது என் பாவமா?
பெண்ணை பெற்றது பெற்றோர் பாவமா?

POET'S NOTES ABOUT THE POEM
வரதட்சணை பற்றி...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success