The Daffodils- தமிழாக்கம் Poem by Joel Jesu Roy

The Daffodils- தமிழாக்கம்

பள்ளத்தாக்கிலும், மலையிலும் நீந்தும்
மிதவை முகிலைப் போல் தனியே அலைந்தேன்.
சந்தித்தேன் திடீரன ஒரு கூட்ட சேனையாய்
பொன்னிறப் பூக்களை;
தடாகப்படுகையில், மரங்களின் படியினில்
தென்றற்காற்றின் தாலாட்டில் படபடக்க, நடனமிட.

பால்வெளியில் மின்னிடும் வைரங்களாய்க்
கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்போல,
விரிகுடாவின் விளிம்புக்கோட்டில் முடிவில்லாமல்
நீண்டிருக்கின்ற அத்தனையும்,
ஒரு பார்வையில் பதினாயிரங்கள் கண்ணில்பட
உற்சாகமாய் நடனமாடின
சிரமசைத்து
மலர்கள்.

அருகே அலைகளும் ஆர்ப்பரித்த போதும்,
களிப்பாட்டம் போடும்
மலர்களை விஞ்சவில்லை.
களிப்பைத் தவிர வேறென்ன கவிஞனுக்கு
இவைகளின் சகவாசத்தால்:
நோக்கினேன், உற்றும் நோக்கினேன் - சிந்தையில் சிறுதுளி;
இம்மலர்களின் கண்காட்சி கொணர்ந்த வளம் என்னவாயிருக்குமென.

வெற்று மனநிலையில், விரக்திசிந்தனையில்
என் மஞ்சத்தில் தலை சாய்க்கையில்,
மின்வெட்டொளியாய்
ஆழ்மனதில் தோன்றும் மலர்கள்
ஆகா! தனினையில் பேரின்பம்;
இதயம் இன்பத்தால் நிரம்பி
பூத்துக்குலுங்கும் பூக்களோடு கூத்தாடும்.

COMMENTS OF THE POEM
Close
Error Success